எந்த ஆத்மாவையும்,அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திப்பதில்லை. அல்குர்ஆன் 23:62 நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூஃமீன்கள் மீது கடமையாகும். அல்குர்ஆன் 2:45
(நபியே!) தொழுது வருமாறு நீர் உம் குடும்பத்தினரை ஏவும்.நீரும் அதன் மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும், உமக்கு வேண்டியவற்றையெல்லாம் நாமே கொடுத்து வருகின்றோம். முடிவான நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். அல்குர்ஆன் 20:132
தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110
“ஈமானுக்கும் குஃப்ருக்கும் இடையே வித்தியாசம் தொழுகையை...