Sunday, July 31, 2011

தொழுகையும், ஜக்காத்தும்

எந்த ஆத்மாவையும்,அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திப்பதில்லை. அல்குர்ஆன் 23:62 நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூஃமீன்கள் மீது கடமையாகும். அல்குர்ஆன் 2:45

(நபியே!) தொழுது வருமாறு நீர் உம் குடும்பத்தினரை ஏவும்.நீரும் அதன் மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும், உமக்கு வேண்டியவற்றையெல்லாம் நாமே கொடுத்து வருகின்றோம். முடிவான  நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். அல்குர்ஆன் 20:132

தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். அல்குர்ஆன் 2:110

“ஈமானுக்கும் குஃப்ருக்கும் இடையே வித்தியாசம் தொழுகையை விடுவதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: முஸ்லிம்,திர்மிதி, அபூதாவூத் நீங்கள் தொழுகையை கடைப்பிடித்துத் தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், ‘ருகூவு’ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து)’ருகூவு’ செய்யுங்கள்.அல்குர்ஆன் 2:43

விசுவாசிகளே உங்களுடைய பொருள்களூம், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களைத்  திருப்பிவிட  வேண்டாம். எவரேனும்  இவ்வாறு செய்தால், அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்தாம். அல்குர்ஆன் 63:9

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). அல்குர்ஆன் 2:171
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். அல்குர்ஆன் 2:277
(மறுமையின் சுவனவாசிகள்) சுவனபதியில் இருந்துக் கொண்டு, (நரகவாசிகளை நோக்கி) உங்களை நரகத்தில் புகுத்தியது எது” என்று குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழக்கூடியவர்களில் இல்லை, நாங்கள் ஏழைகளுக்கு  ஆகாரமளிக்கவில்லை வீணான காரியங்களில் மூழ்கிக்  கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக்   கிடந்தோம். கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். (நாங்கள் மரணித்து இதனை உறுதியாகக் காணும் வரையில்(இவ்வாறே இருந்தோம்) என்றும் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:40-47 வர்கள் தாம்  உண்மையானவர்கள்; பயபக்தியுடையவர்கள். அல்குர்ஆன் 2:177

……எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது இருக்கின்றாரோ அவர்களுக்கு, (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை, நன்மாராயங் கூறுவீராக! (பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக்காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு” உங்களுக்கா நீங்கள் சேகரித்து வைத்திருந்த
வற்றை சுகித்துப் பாருங்கள்” என்று கூறப்படும் நாளையும் (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டும்!) அல்குர்ஆன் 9:34,35

மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு, அல்லாஹ்வும்
ரக்கம்  காட்ட மாட்டான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜரீ இப்னு அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி,முஸ்லிம்,அஹ்மத்

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes